அமைச்சர் பெஞ்சமின் மீது தேர்தல் கமிஷனில் புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பெஞ்சமின் மீது தேர்தல் கமிஷனில் புகார்

Added : ஏப் 07, 2021
Share
சென்னை:'தேர்தல் நடத்தை விதிகளை மீறிய, அமைச்சர் பெஞ்சமின் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, புகார் மனு அனுப்பி உள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:மதுரவாயல் அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின், தன் ஆதரவாளர்களுடன், ஏப்ரல், 6 அன்று, 408வது ஓட்டுச்சாவடி அருகே, அசிங்கமான வார்த்தைகளை கூறி,

சென்னை:'தேர்தல் நடத்தை விதிகளை மீறிய, அமைச்சர் பெஞ்சமின் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, புகார் மனு அனுப்பி உள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:மதுரவாயல் அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின், தன் ஆதரவாளர்களுடன், ஏப்ரல், 6 அன்று, 408வது ஓட்டுச்சாவடி அருகே, அசிங்கமான வார்த்தைகளை கூறி, தி.மு.க.,வினரை வசைபாடி உள்ளார். இது தொடர்பாக, மதுரவாயல் வடக்கு பகுதி, தி.மு.க., இளைஞர் அணிஅமைப்பாளர் நவராஜ், போலீசில் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த முயற்சித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுடன், குற்றச் செயல்களில் ஈடுபட்ட பெஞ்சமின் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X