கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சரத், ராதிகாவுக்கு 'ஓராண்டு' ரூ.3.30 கோடி அபராதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:காசோலை மோசடி வழக்கில், நடிகர் சரத்குமார், மனைவி ராதிகா மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா, தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள, 'மேஜிக் பிரேம்ஸ்' என்ற, நிறுவனத்தின் சார்பில், 'ரேடியன்ஸ்' என்ற, படத் தயாரிப்பு
சரத், ராதிகா, ஒராண்டுசிறை

சென்னை:காசோலை மோசடி வழக்கில், நடிகர் சரத்குமார், மனைவி ராதிகா மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா, தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள, 'மேஜிக் பிரேம்ஸ்' என்ற, நிறுவனத்தின் சார்பில், 'ரேடியன்ஸ்' என்ற, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, 2014ல், 2 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.கடன் தொகை யை திரும்பச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.

ரேடியன்ஸ் நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக, மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில், 75 லட்சம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளும், சரத்குமார் சார்பில், தனிப்பட்ட முறையில், 10 லட்சம் ரூபாய்க்கான ஐந்து காசோலைகளும் வழங்கப்பட்டன.ஏழு காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின.

இதையடுத்து, சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் மீது, ரேடியன்ஸ் நிறுவனம், சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஏழு காசோலைகள் மோசடி வழக்கு தொடர்ந்தது.இரண்டு வழக்குகளில், சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரும், ஐந்து வழக்குகளில், சரத்குமார் மட்டும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

மோசடி வழக்கில் சிக்கிய சரத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., என்பதால், இந்த வழக்குகள், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கு, நீதிபதி அலிசியா முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். கொரோனா தொற்று காரணமாக, ராதிகா ஆஜராகவில்லை என, மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை ஏற்ற நீதிபதி, சரத்குமார் தொடர்புடைய ஐந்து வழக்குகளில், ஓராண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.அதேபோல, ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் மீதான இரண்டு வழக்கில், மூவருக்கும் தலா, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 2.80 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நேரில் ஆஜராகாததால், ராதிகாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார்.இதையடுத்து, மூவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்ய இருப்பதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, கோரிக்கை விடப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தண்டனையை, 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X