சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4,000த்தை நெருங்குது கொரோனா பாதிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் தினமும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 4,000த்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில், 3,986 பேருக்கு தொற்று உறுதியானது; 17 பேர் இறந்துள்ளனர்.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 260 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 80 ஆயிரத்து, 535 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. அதில், சென்னையில், 1,459; செங்கல்பட்டில், 390; கோவையில், 332;

சென்னை:தமிழகத்தில் தினமும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 4,000த்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில், 3,986 பேருக்கு தொற்று உறுதியானது; 17 பேர் இறந்துள்ளனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 260 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 80 ஆயிரத்து, 535 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. அதில், சென்னையில், 1,459; செங்கல்பட்டில், 390; கோவையில், 332; திருவள்ளூரில், 208 என, மாநிலம் முழுதும், 3,986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, 2.01 கோடி மாதிரிகள் பரிசோதனையில், ஒன்பது லட்சத்து, 11 ஆயிரத்து, 110 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை முடித்து நேற்று, 1,824 பேர் உட்பட, எட்டு லட்சத்து, 70 ஆயிரத்து, 546 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில், 10 ஆயிரத்து, 685; கோவையில், 2,767; செங்கல்பட்டில், 2,679 என, மாநிலம் முழுதும், 27 ஆயிரத்து, 741 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, 17 பேர் உட்பட, 12 ஆயிரத்து, 821 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X