தி.மு.க., - எம்.பி., கனிமொழி, தமிழகம் முழுதும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
கொரோனா தொற்று உறுதியானதால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், முழு உடற்கவசம் அணிந்து, நேற்று முன்தினம், சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தார்.இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டில், தனிமைப்படுத்தி கொண்டு ஓய்வெடுக்க உள்ளார். இதற்கிடையே ஸ்டாலினின் சகோதரரும், கருணாநிதியின் மகனுமான தமிழரசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE