பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தர் நியமனம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பொறுப்பேற்ற நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள், இப்பணியில் இருப்பார். துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்வகுமார், 58, கால்நடை மருத்துவ பல்கலையில், 32 ஆண்டுகள், மூத்த பேராசிரியராக பணியாற்றிய அனுபவம்
கால்நடை, துணை வேந்தர், கவர்னர், நியமனம்

சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பொறுப்பேற்ற நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள், இப்பணியில் இருப்பார்.

துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்வகுமார், 58, கால்நடை மருத்துவ பல்கலையில், 32 ஆண்டுகள், மூத்த பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பல்கலை தொழில்நுட்ப கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.இவர், 84 பத்திரிகை வெளியீடு; சர்வதேச அளவில், ஐந்து; தேசிய அளவில் மூன்று ஆராய்ச்சி கட்டுரைகள்; சர்வதேச அளவில், 14 ஆய்வு அறிக்கைகள் சமர்பித்துள்ளார். மூன்று புத்தகங்கள் எழுதி உள்ளார். மேலும், 4.7 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று சர்வதேச ஆராய்ச்சிகளையும், 11 தேசிய அளவிலான, ஆராய்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார்.

பல்கலை நிர்வாகத்தில், 22 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். தொலைதுார கல்வி இயக்குனர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவி வகித்ததோடு, சென்னை மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வராக பணியாற்றி உள்ளார். இவர், ஈரோடு மாவட்டம், கருகம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X