சண்டிகர்:பஞ்சாபில், கொரோனா வேகமாக பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபில், முதல்வர், அமரீந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம், ஒரே நாளில், 2,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஏப்., 30 வரை
இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 2 லட்சத்து, 57ஆயிரத்து, 57ஆக அதிகரித்துள்ளது. 7,216 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பஞ்சாப் அரசு, இரவு, 9:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இது, ஏப்.,30 வரை அமலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது, அரசியல் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் கொரோனா பாதித்தோரில், 80 சதவீதம் பேருக்கு, பிரிட்டனில் உருவான, அதிக வீரியமுள்ள உருமாற்ற கொரோனாவின் தாக்கம் உள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்கள், உள்ளாட்சி தேர்தல், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றால், பஞ்சாபில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
'இ - பாஸ்'
டில்லியிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு, 10:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப் படவில்லை. அதேசமயம், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், 'இ - பாஸ்' வைத்திருப்போர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என, டில்லி அரசு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE