பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி தெளித்த பின் வகுப்பறையை பயன்படுத்த அறிவுரை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:'ஓட்டுச் சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில், கிருமி நாசினி தெளித்த பிறகே, வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம், மாநிலம் முழுதும் நடந்தது. தேர்தலுக்கான ஓட்டு சாவடிகளாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அனைத்து

சென்னை:'ஓட்டுச் சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில், கிருமி நாசினி தெளித்த பிறகே, வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம், மாநிலம் முழுதும் நடந்தது. தேர்தலுக்கான ஓட்டு சாவடிகளாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு ஆசிரியர்களும், அலுவலர்களும் பணிக்கு வரும் நிலையில், பிளஸ் 2 மாணவர்கள் மட்டும், நேரடி வகுப்பில் பங்கேற்கின்றனர்.

இதற்காக, பள்ளி வளாகங்கள் நேற்று சுத்தம் செய்யப்பட்டன. வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே வழங்கப்பட்ட அறிவுரை: கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பள்ளி வளாகங்களில், உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும், இன்றும் ஒரு முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகள், மாணவர்கள் அமரும் இருக்கைகள், ஆசிரியர்களின் நாற்காலி, மேஜைகள், வளாக மற்றும் வகுப்பு சுவர்கள், உணவு அருந்தும் பகுதி உள்ளிட்ட இடங்களில், கிருமிநாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X