பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி: பார்த்திபனுக்கு பாதிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட, நடிகர் பார்த்திபனுக்கு திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சைக்கு பின், அவர் தேறியுள்ளார்.நடிகர் பார்த்திபன், ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்த நிலையில், அவர் ஓட்டுப்போட வரவில்லை. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியவர்களுக்கு, அவர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.'டுவிட்டரில்' அவர்

சென்னை:இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட, நடிகர் பார்த்திபனுக்கு திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சைக்கு பின், அவர் தேறியுள்ளார்.

நடிகர் பார்த்திபன், ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்த நிலையில், அவர் ஓட்டுப்போட வரவில்லை. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியவர்களுக்கு, அவர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.'டுவிட்டரில்' அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட, எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில், கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டது.

மருத்துவருக்கு போட்டோ எடுத்து அனுப்பி, சிகிச்சை எடுத்து கொண்டேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.மேலும், 'எனக்கு, 'அலர்ஜி' இருப்பதாலேயே பாதிப்பு ஏற்பட்டது. இது, அனைவருக்கும் ஏற்படாது. எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும். அதனால், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றும், அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நடிகர் சமுத்திரக்கனியும் ஓட்டு போடவில்லை என்ற, குற்றச்சாட்டுக்கு ஆளானார். நேற்று அவர், ஓட்டு போட்ட விரல் மை அடையாளத்தை, டுவிட்டரில் வெளியிட்டு, குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X