10 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க மனு கோவா சபாநாயகர் 20ல் இறுதி முடிவு

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'கோவாவில், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க மனு மீதான இறுதி உத்தரவு, வரும், 20ம் தேதி பிறப்பிக்கப்படும்' என, கோவா சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னேகர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான

புதுடில்லி:'கோவாவில், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க மனு மீதான இறுதி உத்தரவு, வரும், 20ம் தேதி பிறப்பிக்கப்படும்' என, கோவா சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னேகர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான சந்திரகாந்த் காவ்லேக்கர் உட்பட, 10 காங்., எம்.எல்.ஏ.,க்கள், கடந்த, 2019 ஜூலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.இதன் வாயிலாக, கோவா சட்டசபையில், பா.ஜ.,வின் பலம், 27 ஆக உயர்ந்தது. காங்.,கின் பலம், ஐந்தாக குறைந்தது.பா.ஜ.,வில் இணைந்த, 10 எம்.எல்.ஏ.,க்களை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய கோரி, சபாநாயகர் ராஜேஷ் பட்னேகரிடம், காங்., சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்காமல், சபாநாயகர் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், தகுதி நீக்க மனு மீது இறுதி முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு, காங்., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தகுதி நீக்க மனு மீது, வரும், 29ம் தேதி சபாநாயகர் இறுதி முடிவை அறிவிப்பார்' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தில் தெரிவித்தார். 'அவ்வளவு கால தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 'வரும், 22ம் தேதி அறிவிக்கப்படும்' என அரசு தரப்பு தெரிவித்தது. அதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், 20ம் தேதிக்குள் அறிவிக்குமாறு கூறினர்.

இதையடுத்து, சபாநாயகர் ராஜேஷ் பட்னேகருடன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆலோசனை நடத்தினார். பின், வரும், 20ம் தேதி, தகுதி நீக்க மனு மீது இறுதி முடிவை அறிவிக்க, சபாநாயகர் ஒப்புக் கொண்டு உள்ளதாக, துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
08-ஏப்-202110:51:54 IST Report Abuse
selvaraju why so fast result sir , still have time take it another 3 years.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X