வாஷிங்டன் :இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு வந்திருப்பதாக, பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர், கீதா கோபிநாத் கூறியுள்ளார். ஆண்டு தோறும் நடைபெறும் உலக வங்கியின் வசந்த கால கூட்டத்துக்கு முன்னதாக, கீதா கோபிநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் பொருளாதாரம் , நடப்பு ஆண்டில், 12.5 சதவீதமாக அதிகரிக்கும் என, பன்னாட்டு நிதியம் கணித்து அறிவித்துள்ளது. இது, சீனாவின் வளர்ச்சியை விட அதிகமாகும். இவ்வளவுக்கும், கொரோனா காலத்தில் அதிக வளர்ச்சியை கண்ட நாடாக, சீனா இருந்தது.
கடந்த, இரு மாதங்களாக, இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதற்கான சான்றுகளை நாங்கள் காண்கிறோம்.இந்தியாவை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி குறித்த எங்கள் கணிப்பில், சிறு மாற்றத்தை செய்துஉள்ளோம். நடப்பு ஆண்டில், முந்தைய கணிப்பை விட, ஒரு சதவீதம் அதிகமாக இருக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE