சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.10 லட்சம் நகை மீட்பு

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ரயிலில் பயணி தவறவிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் எழும்பூர் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது.கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பூச்சிக்காட்டைச் சேர்ந்த மதிகிருஷ்ணன் 48 என்பவர் எஸ்-3' பெட்டியில் பயணம் செய்தார்.ரயில் நேற்று அதிகாலை
 ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.10 லட்சம் நகை மீட்பு

சென்னை:ரயிலில் பயணி தவறவிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் எழும்பூர் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பூச்சிக்காட்டைச் சேர்ந்த மதிகிருஷ்ணன் 48 என்பவர் எஸ்-3' பெட்டியில் பயணம் செய்தார்.ரயில் நேற்று அதிகாலை தாம்பரத்தில் நின்றதும் இறங்கினார். ரயில் புறப்பட்ட போது தான் அவர் நகைகள் வைத்திருந்த பையை பெட்டியில் மறந்து விட்டு இறங்கியது தெரியவர அதிர்ந்தார்.

நடைமேடையில் பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்க உடனடியாக எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.எழும்பூர் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ரயில்வே பாதுகாப்புபடையினர் சோதனை செய்தபோது பை ஒன்றில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. பையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக பயணிக்கு தகவல்தெரிவித்தனர்.எழும்பூர் வந்த பயணி உரிய அடையாளம் கூறியதால் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
08-ஏப்-202121:21:49 IST Report Abuse
THINAKAREN KARAMANI நகையைத் தவறவிட்டு பறிதவித்த குடும்பத்துக்கு தக்க சமயத்தில் உதவி புரிந்து நகைகள் திரும்பக் கிடைக்க உதவிய பாதுகாப்பு படையினருக்கு நன்றியும் பாராட்டுக்களும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X