சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.79 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 79.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜா நகரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் மாலை 5:50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆனாஸ் 28 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில்
 ரூ.79 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 79.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜா நகரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் மாலை 5:50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆனாஸ் 28 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது அவர் அணிந்திருந்த 'சாக்ஸ்' உள்ளிருந்து 59.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.28 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல் துபாய் நகரில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு சென்னை வந்தது.

அதில் வந்த சென்னையைச் சேர்ந்த நைனா முகமது 30 என்பவரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில் அவரது ஆசனவாயிலிருந்து 20.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 446 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 'தங்கம் கடத்திய இருவரும் உள்நாட்டு பயணியராக விமானத்தில் பயணித்து கடத்தலில் ஈடுபட்டது' தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
08-ஏப்-202112:51:27 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அதென்னப்பா கடத்தல் செய்பவனெல்லாம் ஒரே மதத்தை சேர்ந்தவனாக இருக்கிறான். எந்த ஊடகமும் அது பற்றி விவாதம் நடத்துவதில்லை .
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
08-ஏப்-202112:49:27 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan adhennappa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X