சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் 'சப்ளை' வேண்டும் நகராட்சி அலுவலகம் முற்றுகை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கூடலுார் : மேல் கூடலுார் பகுதிக்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தி, மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேல்கூடலுார் பகுதிக்கு உட்பட்ட ஓ.வி.எச்., சாலை, கே.கே.நகர், குறிஞ்சி நகர், மேல் கூடலுார் பகுதிகளுக்கு மூன்று வாரமாக, முறையாக குடிநீர் 'சப்ளை' செய்யப்படவில்லை. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.அதிருப்தி அடைந்த மக்கள்

கூடலுார் : மேல் கூடலுார் பகுதிக்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தி, மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்கூடலுார் பகுதிக்கு உட்பட்ட ஓ.வி.எச்., சாலை, கே.கே.நகர், குறிஞ்சி நகர், மேல் கூடலுார் பகுதிகளுக்கு மூன்று வாரமாக, முறையாக குடிநீர் 'சப்ளை' செய்யப்படவில்லை. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.அதிருப்தி அடைந்த மக்கள் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி, நேற்று காலை, 11:00 மணிக்கு, கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலுார் இன்ஸ்பெக்டர் அருண், நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி அவர்களை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.நகராட்சி பொறியாளர் கூறுகையில், 'குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு கிடைத்தவுடன், மோட்டார் இயக்கி, அதிலிருந்து தடையின்றி குடிநீர் வழங்கப்படும்,' என, உறுதியளித்தார். அதனை ஏற்று, முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X