பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஊட்டி: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார் (தனி) ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில், தேர்தலுக்காக, 868 ஓட்டுசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளில், 3,285 மின்னணு ஓட்டுப்பதிவு மூலம், ஓட்டுப்பதிவு நடந்தது.அனைத்து ஓட்டுசாவடிகளிலிருந்து நேற்று முன்தினம் இரவு

ஊட்டி: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுார் (தனி) ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில், தேர்தலுக்காக, 868 ஓட்டுசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளில், 3,285 மின்னணு ஓட்டுப்பதிவு மூலம், ஓட்டுப்பதிவு நடந்தது.அனைத்து ஓட்டுசாவடிகளிலிருந்து நேற்று முன்தினம் இரவு மின்னணு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது.

நேற்று, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தொகுதி வாரியாக கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்களை, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில், மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா, தேர்தல் பொதுபார்வையாளர் பனுதர்பெஹரா, சப்-கலெக்டர் மோனிகா ரானா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், பாதுகாப்புடன் 'சீல்' வைக்கப்பட்டது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''மூன்று தொகுதிக்குட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய போலீசார், மாநில போலீசார் என, 308 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் 'சீல்' வைக்கப்பட்ட அறைகளை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X