பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என பல்கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளுக்கு இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை.பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் தினமும்

சென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என பல்கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளுக்கு இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை.பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் தினமும் கல்லுாரிகளுக்கு வந்து அங்கிருந்தவாறு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கும் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தவில்லை. அரசு அனுமதித்தால் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.எனவே தற்போதைய நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே வகுப்பும் தேர்வும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X