பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் மானியம்: பயன்பெற அழைப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் பெற்று ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தால், திரும்பவும் மானியத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் அமைத்து பயனடையலாம் என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.கோடை காலம் உச்சமடைந்து வரும் நிலையில், வெயில் மிகவும் அதிகரித்து, வாட்டுகிறது. விவசாய பயிர்கள், வாடி வதங்கி வருகின்றன.என்னதான் பாசனம் அளித்தாலும், ஒரு மணி

பொள்ளாச்சி : விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் பெற்று ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தால், திரும்பவும் மானியத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் அமைத்து பயனடையலாம் என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோடை காலம் உச்சமடைந்து வரும் நிலையில், வெயில் மிகவும் அதிகரித்து, வாட்டுகிறது. விவசாய பயிர்கள், வாடி வதங்கி வருகின்றன.என்னதான் பாசனம் அளித்தாலும், ஒரு மணி நேரத்தில் காய்ந்து வறண்டு விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சொட்டுநீர் பாசனம் மூலம் பாசனம் செய்யும் போது, பயிரின் வேர் மட்டுமே நனைகிறது. சுற்றுப்புற உஷ்ணம் அப்படியே இருக்கிறது. அதுவே, ஸ்பிரிங்ளர் எனப்படும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து பாசனம் செய்தால், விளைநிலம் முழுக்க நனைவதுடன், சுற்றுச்சூழலில் உள்ள வெப்பம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படுகிறது.

காற்றிலும் ஈரப்பதம் அதிகரிப்பதால், வறட்சியில் இருந்து, சாகுபடி பயிர்கள் தப்பிக்கின்றன.இதனால், தற்போது நிலவும் கோடை வெயிலில் இருந்து பயிர்களை காக்க, சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள், கூடுதலாக ஸ்பிரிங்ளர் எனப்படும் தெளிப்பு நீர் பாசனமும் அமைத்துக் கொள்ளலாம்.தென்னந்தோப்பில் இருந்து, அனைத்து வகை பயிர்களுக்கும் இந்த பாசனத்தை பயன்படுத்தும்போது, கோடை வெப்பத்தால் ஏற்படும் வாட்டம் நீங்கி, பயிர்கள் பசுமையாக வளர்வதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.

"விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் பெற்று ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தால், மீண்டும் மானியத்தில் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்" என, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X