சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் தட்டுப்பாட்டால் தொழிலாளர்கள் வேலை இழப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கீழக்கரை : கீழக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் கட்டட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழக்கரையில் பெரும்பாலான வீடுகள் பழமையாக இருப்பதால் அதனை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.தற்போது ஆற்று மணல் கிடைக்காததால் பெரும்பாலானோர்.எம்.சான்ட் மணலை பயன்படுத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் மணல்

கீழக்கரை : கீழக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் கட்டட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கீழக்கரையில் பெரும்பாலான வீடுகள் பழமையாக இருப்பதால் அதனை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.தற்போது ஆற்று மணல் கிடைக்காததால் பெரும்பாலானோர்.எம்.சான்ட் மணலை பயன்படுத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் மணல் கிடைக்காததால் கட்டடப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டில் உள்ளனர்.காஞ்சிரங்குடி கொத்தனார் முருகவேல் கூறியதாவது; தற்போது ஆற்றுமணல் வரத்து எங்கும் கிடைக்காததால், எம்.சான்ட் டிராக்டர் ரூ. 5 ஆயிரம் வீதம் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இருந்து விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆற்று மணலின் மூலம் கட்டுமான பணிகள் வேலை பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது.பல இடங்களில் மணல் கிடைக்காததால் பணிகள் முடங்கி கிடக்கிறது. எனவே அரசு ஆற்றுமணல் முழுமையாக பெர்மிட் அனுமதியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனுமதியின்றி அள்ளப்படும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X