பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி வளாகம் துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசாருடன் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்த

ராமநாதபுரம் : ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி வளாகம் துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசாருடன் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் தேவிப்பட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி முதல் தளத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.நேற்று காலை மத்திய தேர்தல் பார்வையாளர், கலெக்டர், எஸ்.பி., முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அறைகளின் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் பீஸ் கேரியர் அகற்றப்பட்டது.

அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய அயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டனர். இங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி., கார்த்திக் கூறியதாவது:எந்த தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில், நான்கு சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் இயந்திரங்கள் உள்ள அறைகளின் முன்பு 16 மத்திய ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 21 பேர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

மூன்றாவது அடுக்கில் கல்லுாரிக்கு வெளியே உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் 67 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.8 மணி நேரம் என்ற அளவில் ஒரு ஷிப்டில் 104 பேர் வீதம் 24 மணி நேரமும் மூன்று ஷிப்டுகளில் 312 பேர் தினமும் தீவீர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர், என்றார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X