பஸ் கிடைக்காமல் வாக்காளர்கள் தவிப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில், ஓட்டுப் போட வந்த வாக்காளர்கள், திரும்பிச் செல்லபோதிய பஸ் வசதி இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறை தொகுதியில், 2,05,479 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக மொத்தம், 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வால்பாறை மலைப்பகுதியில் மட்டும், 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த

வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில், ஓட்டுப் போட வந்த வாக்காளர்கள், திரும்பிச் செல்லபோதிய பஸ் வசதி இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகினர்.

வால்பாறை தொகுதியில், 2,05,479 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக மொத்தம், 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வால்பாறை மலைப்பகுதியில் மட்டும், 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியிலிருந்து நள்ளிரவு வரை ஓட்டுபெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டன.

வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மூன்று ஓட்டுச்சாவடிகளில் மட்டும் வனத்துறையினர் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது.வால்பாறை சட்ட சபை தொகுதியில், 70.10 சதவீதம் ஓட்டுப்பதிவானது. கடந்த, 2016ம் ஆண்டு, 73.04 சதவீதம் ஓட்டுப்பதிவானது.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட தொழில்நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஓட்டுப்போட்டுவிட்டு நேற்று காலை முதல் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லத்துவங்கினர். ஆனால் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டதால், வேறு வழியின்றி தனியார் வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து, மக்கள் பயணம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X