பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்களில் பெயர் பலகை குழப்பம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி மற்றும் உள்ளூர்களுக்கு, 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, மாற்றுப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.வால்பாறையில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை, பாலக்காடு போன்ற ஊர்களில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு, கழிக்கப்பட்ட, இரண்டாந்தர பஸ்களே

வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி மற்றும் உள்ளூர்களுக்கு, 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, மாற்றுப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

வால்பாறையில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை, பாலக்காடு போன்ற ஊர்களில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு, கழிக்கப்பட்ட, இரண்டாந்தர பஸ்களே இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களின் முன்புறம், ஏற்கெனவே ஒட்டப்பட்டிருக்கும் வழித்தடப் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. அப்படியே இயக்கப்படுவதால், வால்பாறை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குழம்புகின்றனர்.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளதால்தான் அரசு பஸ்கள் வெகு சீக்கிரம் பழுதடைந்து விடுகின்றன. பெயர்ப்பலகை குழப்பம் விரைவில் தீர்க்கப்படும்' என்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X