பொது செய்தி

தமிழ்நாடு

பலத்த காற்றால் 10 நாட்களாக மீன்பிடித் தொழில் முடக்கம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வாலிநோக்கம் : மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து 10 நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல், மாரியூர், மூக்கையூர், நரிப்பையூர், ரோஜ்மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு படகுகளும், பைபர் படகுகளும் உள்ளது. ஏப். முதல் வாரத்தில் கச்சா காத்து எனப்படும் காற்று திசை மாறி வீசுவதால் பலத்த காற்றுடன் பேரலைகள்

வாலிநோக்கம் : மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து 10 நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.

வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல், மாரியூர், மூக்கையூர், நரிப்பையூர், ரோஜ்மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு படகுகளும், பைபர் படகுகளும் உள்ளது. ஏப். முதல் வாரத்தில் கச்சா காத்து எனப்படும் காற்று திசை மாறி வீசுவதால் பலத்த காற்றுடன் பேரலைகள் எழும்பி வருகிறது. இதனால் மீனவர்கள் கடந்த 10 தினங்களாக கடலுக்கு செல்லாமல் தங்களது நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக கரை ஓரங்களில் நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது; காற்றின் திசை மாறி கச்சா காற்று வீசி வருவதால் கடலுக்கு செல்லவில்லை. படகில் சிறு மராமத்து பணிகளை செய்து வலைகளை பின்னி தயாராகி வருகிறோம். இன்னும் சில தினங்களில் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோம் என்றனர்.இப்பகுதியில் கரைவலை மீன் பிடிப்பு சீசன் கடந்த மார்ச் இறுதியில் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X