இரு தொகுதி ஓட்டுப்பதிவிலும் பெண்களுக்கு ஆர்வமில்லை! பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி பதிவில் சுணக்கம்| Dinamalar

தமிழ்நாடு

இரு தொகுதி ஓட்டுப்பதிவிலும் பெண்களுக்கு ஆர்வமில்லை! பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி பதிவில் சுணக்கம்

Added : ஏப் 08, 2021
Share
உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வாக்காளர் பட்டியலில், பெண்கள் அதிகம் உள்ள நிலையில், தற்போதைய தேர்தலில் பெண்கள் ஓட்டுப்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 278 ஆண்கள், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 428 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 69 ஆயிரத்து, 728 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம்

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வாக்காளர் பட்டியலில், பெண்கள் அதிகம் உள்ள நிலையில், தற்போதைய தேர்தலில் பெண்கள் ஓட்டுப்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 278 ஆண்கள், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 428 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 69 ஆயிரத்து, 728 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.நேற்றுமுன்தினம் நடந்த ஓட்டுப்பதிவின் போது, இத்தொகுதியில், 94 ஆயிரத்து, 961 ஆண்கள், 97 ஆயிரத்து, 394 பெண்கள் என, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 355 பேர் ஓட்டளித்துள்ளனர்.

இதில், ஆண்கள் ஓட்டுப்பதிவு சதவீதம், 72.89 சதவீதமாகவும், பெண்கள் ஓட்டுப்பதிவு சதவீதம், 69.85 ஆகவும் உள்ளது. பெண்களை விட ஆண்கள் ஓட்டுப்பதிவு சதவீதம், 3 சதவீதம் அதிகமாக உள்ளது.உடுமலை தொகுதியின் ஒட்டு மொத்த ஓட்டு சதவீதம், 71.31 ஆக இருந்தது. கடந்த, 2016 தேர்தலில், 73.10 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்த நிலையில், இரண்டு சதவீதம் குறைந்தது.

மடத்துக்குளம்:

மடத்துக்குளத்தில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 790 ஆண்கள்; ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 659 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 21 என, 2 லட்சத்து, 48 ஆயிரத்து, 470 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியிலும், ஆண்களை விட பெண்களே அதிகளவு இடம் பெற்றுள்ளனர்.ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப் பதிவின் போது, 89 ஆயிரத்து, 277 ஆண்களும், 90 ஆயிரத்து, 926 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், ஒருவர் என, ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 204 பேர் மட்டுமே ஓட்டளித்திருந்தனர்.

இதில், ஆண்கள் ஓட்டுப்பதிவு சதவீதம், 73.30 சதவீதமாகவும், பெண்கள் ஓட்டுப்பதிவு சதவீதம், 71.78 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் சதவீதம், 4.76 ஆகவும் இருந்தது. ஆண்களை விட, 2 சதவீதம் பெண்கள் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாகவே காணப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதியின் ஒட்டுமொத்த ஓட்டுப்பதிவு சதவீதம், 72.52 சதவீதமாக இருந்தது. கடந்த, 2106 தேர்தலில், இத்தொகுதியில், 75.79 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது, 3 சதவீதம் வரை ஓட்டுப்பதிவாகவில்லை.பிரதான அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, பெரும்பாலான கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், உரிமைத்தொகை, உதவித்தொகை, இட ஒதுக்கீடு, சிலிண்டர் இலவசம் என பெண்களை மையமாக வைத்து, ஏராளமான அறிவிப்புகள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், ஓட்டளிக்க பெண்கள் ஆர்வம் காட்டாதது, அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடமையாற்றாத நகரம்இரு தொகுதிகளிலும், நகரப்பகுதி மக்களை விட, கிராமப்புற மக்கள் ஓட்டளிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். உடுமலை நகராட்சி பகுதியில், 19 மையங்களில், 80 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதி மக்கள் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாததால், 53 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X