பொது செய்தி

தமிழ்நாடு

போர்வெல் தண்ணீரை சுத்திகரிக்க இயந்திரம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில், பொதுமக்கள் சுத்திரிக்கப்பட்ட குடிநீரைப் பெறுவதற்கான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் போர்வெல் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, குடிநீர் வழங்குவதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திட்டம் 2019-20ன்கீழ், 10

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில், பொதுமக்கள் சுத்திரிக்கப்பட்ட குடிநீரைப் பெறுவதற்கான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் போர்வெல் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, குடிநீர் வழங்குவதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திட்டம் 2019-20ன்கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.மேலும், அருகில் உள்ள போர்வெல்லில் இருந்து ஐந்தாயிரம் லிட்டர் தண்ணீர் விடப்பட்டு, 2,500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகப் பெறப்படுகிறது. மீதமுள்ள கழிவு தண்ணீர் அருகில் உள்ள கிணற்றில் விடப்படுகிறது.

இந்த இயந்திரம், தேர்தல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டது. அப்போதே, பரிசோதித்தும் பார்க்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. தேர்தல் முடிந்ததும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து வந்தது.தற்போது, ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஒரு வாரத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 34 ஊராட்சிகளிலும், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பொருத்தி, நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X