சாயல்குடி : மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக காவிரி நீர் வரத்து இல்லாமல் உள்ளது.
சாயல்குடி அருகில் மாரியூர் ஊராட்சிக்குட்பட்ட மேலமுந்தல் கிராமத்தில் 2000 பேர் வசித்து வருகின்றனர்.மாரியூர் கடற்கரை பகுதியாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள கிணற்றில் நல்ல சுவையான குடிநீர் கிடைத்து வருகிறது. அதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலமுந்தல் கிராமத்தில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு சேதமடைந்திருந்தது.இந்நிலையில் கடந்த 2018ல் அதே அளவில் புதியதாக காவிரி நீர் சப்ளை செய்வதற்காக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.
இதுவரை புதிய மேல்நிலைத் தொட்டியில் காவிரி நீர் இணைப்பு மற்றும் உள்ளூர் குடிநீர் இணைப்பு வழங்காமல் காட்சிப்பொருளாக உள்ளது.மேலமுந்தல் கிராம மக்கள் கூறியதாவது;. 2018 நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.5 லட்சம் செலவில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தனியார் வழங்கிய கிணற்றின் மூலம் பம்பிங் செய்து மோட்டார் அமைக்கப்பட்டது. இதுவரை அதில் மின்சப்ளை கொடுக்காததால் காட்சிப் பொருளாக உள்ளது. புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் காவிரி நீர் சப்ளை இதுவரை வரவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக காவிரி நீர் இல்லாமல் உள்ளது ஒரு குடம் ரூபாய் பத்துக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய மாரியூர் ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE