சிவகங்கை, : தமிழகத்தில் மழை நீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர் மேம்பாடு குறித்து அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாவட்டங்களில் உள்ள அனைத்து கண்மாய், குளம், ஊரணி குறித்து விபரங்கள் சேகரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மேம்பாடு குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவானது தனது இரண்டாவது ஆலோசனை கூட்டத்தினை நடத்தியது.இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி தமிழகம்முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், இதன் நீர் பிடிப்பு பகுதி, கரைகள் நீளம், பாசன வசதிக்கு பயன்படுகிறதா, பயன்படாததா, கண்மாய்களின் ஆழம், இதில் எவ்வளவு நீர் சேமிக்க முடியும்.கண்மாய்களில் உள்ள கழுங்குகள், மதகுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சேகரித்து குழுவிற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE