குப்பைக் கழிவால் திணறும் ஆறு; நோய் அபாயத்தை தடுப்பது யாரு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை நகரில் குடியிருப்பு வழியாக, வாழைத்தோட்டம் ஆறு பாய்கிறது. சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான வாழைத்தோட்டம் ஆறு, பொதுமக்கள் கொட்டும் குப்பைக்கழிவுகளால் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சி சார்பில், கடந்த ஆண்டு மழைக்கு முன்னதாக வாழைத்தோட்டம் ஆறு துார்வாரப்பட்டதால்,

வால்பாறை : வால்பாறை நகரில் குடியிருப்பு வழியாக, வாழைத்தோட்டம் ஆறு பாய்கிறது. சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான வாழைத்தோட்டம் ஆறு, பொதுமக்கள் கொட்டும் குப்பைக்கழிவுகளால் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சி சார்பில், கடந்த ஆண்டு மழைக்கு முன்னதாக வாழைத்தோட்டம் ஆறு துார்வாரப்பட்டதால், பருவமழையின்போது அவ்வளவாக பாதிப்பு ஏற்படவில்லை. வாழைத்தோட்டம், டோபி காலனி குடியிருப்பு வழியாக சோலையாறு அணையை நோக்கி செல்லும் தண்ணீரில் குப்பைக்கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆற்றில் தேங்கி கிடக்கும் குப்பைக்கழிவுகளால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்களின் நலன் கருதி ஆற்றில் தேங்கியிருக்கும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

வீடுதோறும் துாய்மைப்பணியாளர்கள் குப்பைகளை நேரில் பெற்றுச்செல்லும் நிலையில், ஆற்றில் குப்பைக்கழிவுகளை வீசுவதை ஏற்க முடியாது. பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும்', என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X