பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டியே கிடக்கும் மகளிர் குழு கட்டடங்கள்; பயன்பாட்டுக்கு திறப்பது எப்போது?

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நுாற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பயன்பாடின்றி வீணாகின்றன.தமிழகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம் முதன்முதலில், 1989ம் ஆண்டு தர்மபுரியில் துவக்கப்பட்டது.சேமிப்பு, கடன், காப்பீடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும் இக்குழுக்கள்,

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நுாற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பயன்பாடின்றி வீணாகின்றன.

தமிழகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம் முதன்முதலில், 1989ம் ஆண்டு தர்மபுரியில் துவக்கப்பட்டது.சேமிப்பு, கடன், காப்பீடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும் இக்குழுக்கள், அரசின் ஆதரவு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக மிக வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவின.

தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 59 லட்சம் குழுக்கள் இயங்கி வந்தன. தற்போது இந்த எண்ணிக்கை, சுமார், 3 லட்சத்து 3,000 ஆக உள்ளது.மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. அவற்றில் முக்கியமானது, சுய தொழில் செய்யும் குழுக்களுக்கு உதவியாக, ஊராட்சி பகுதியில் பயிற்சி மற்றும் பணிமனை கூடங்கள் அமைத்து தந்தது.

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், நுாற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.மகளிர் குழுக்களுக்காக அமைக்கப்பட்ட, 90 சதவீதம் கட்டடங்கள், பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.இதனால், மகளிர் குழு கூட்டங்கள், கோவில் திண்ணை, மரத்தடியில் நடத்தப்படுகின்றன.

கட்டடங்கள் வீணாவதை தவிர்க்க, ஒன்று அவற்றை மகளிர் குழுக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும். அல்லது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்புகள் நடத்துவது, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்கள் பயன்பாட்டுக்கு அளித்தல், என, பயனுள்ள மாற்று பயன்பாடுகளுக்கு அளிக்க ஒன்றிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X