பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் 165 பேருக்கு கொரோனா ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பாதிப்பு அதிகரிக்கும்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா பரவல் வேகத்தை குறைக்க, மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது 165 பேர் தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவலால், இது வரை 7126 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6834 பேர் டிஸ்சார்ஜ்

சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா பரவல் வேகத்தை குறைக்க, மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது 165 பேர் தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவலால், இது வரை 7126 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6834 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இம்மாவட்டத்தை சேர்ந்த 127 பேர் கொரோனா பாதித்து, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.தற்போதும் சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனை, அமராவதிபுதுார் மருத்துவமனைகளிலும், வீட்டு தனிமையில் 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

பொதுமக்கள் அதிகளவில் தேவையின்றி வெளியே வர வேண்டாம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அடிக்கடி கைகளை சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.சட்டசபை தேர்தல் பிரசார காலத்தில் பொதுக்கூட்டம், பிரசாரங்களில் பங்கேற்றதின் மூலம், இதன் பரவல் வேகம் எடுத்துள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்றினால் மட்டுமே, கொரோனா வேகத்தை தடுக்க முடியும் என சுகாதாரத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி கூறியதாவது, தற்போதுள்ள நிலையில் ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேகமாக பரவுகிறது. எனவே, கொரோனா வேகத்தை உணர்ந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X