பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டிக்கிடக்கும் புதிய மீன் மார்க்கெட்பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பகுதியில் உழவர் சந்தைக்கு அருகில் ரூ. 1.10 கோடியில்புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்பட்டு திறப்பு விழாவுடன் பூட்டப்பட்டுள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல், தொண்டி, உள்ளிட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பகுதியில் உழவர் சந்தைக்கு அருகில் ரூ. 1.10 கோடியில்புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்பட்டு திறப்பு விழாவுடன் பூட்டப்பட்டுள்ளது.

இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல், தொண்டி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்கள் ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. சாலைத்தெருவில் மீன், காய்கறி விற்பனை மார்க்கெட் தனியார் மூலம் செயல்படுகிறது. இப்பகுதியில் வாகனங்களை வெளியே கண்டபடி நிறுத்துவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி மூலம் ரூ.1.10 கோடிசெலவில் 54 கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறை உன் புதிய மீன் மார்க்கெட் உழவர்சந்தை அருகே கட்டபட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முதல்வர் பழனிசாமி மீன்மார்க்கெட்டை திறந்து வைத்தார்.திறப்பு விழாவிற்கு பின்னரும் டெண்டர் விட்டு கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் கால தாமதம் செய்வதாக புகார் உள்ளது. புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நகரின் மைய பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளதால் இது திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை தவிர்க்கப்படும்.நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், 'தனியாரிடம் கடை வாடகை வசூல் டெண்டர் விடப்பட்டுள்ளது தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தபிறகு விரைவில் மீன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,'என்றார்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X