ஆனைமலை : ஆனைமலை அடுத்த வளந்தாயமரம் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி அருகே, ரோட்டை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.பொள்ளாச்சி பகுதியில் இருந்து, கேரளாவுக்கு காய்கறிகள், மாடுகள், மளிகை பொருட்கள், மீன்கரை ரோடு வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
இந்நிலையில், குறுகலாக இருந்த மீன்கரை ரோடு, 2020 பிப்ரவரி மாதம் ஏழு மீட்டர் அகலத்தில் இருந்து, 10.5 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக, ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி அருகிலுள்ள வளந்தாயமரத்தின் அடையாளமாக திகழ்ந்த, பழமையான ஆய மரம், மக்கள் எதிர்ப்பை மீறி வெட்டி சாய்க்கப்பட்டது. அப்போது, மரம் வெட்டப்பட்ட பகுதியில் மட்டும் ரோடு சீரமைக்கப்படவில்லை.
விரிவாக்க பணி முடிந்து, பல மாதங்களைக் கடந்தும், இன்னமும் ரோடு சரிசெய்யப்படாமல் உள்ளதால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள்,திடீரென ஜல்லிக்கற்கள் இருக்கும் பகுதிக்கு சென்று, தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE