சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பெட்டியை வழி மறித்த யானைகள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை அருகே நள்ளிரவில் ஓட்டு பெட்டியை, காட்டு யானைகள் வழிமறித்ததால், பதற்றம் ஏற்பட்டது.வால்பாறை மலைப்பகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்ததால், இரவு நேரத்தில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தாய்முடி எம்.டி., டிவிஷன் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளியில்

வால்பாறை : வால்பாறை அருகே நள்ளிரவில் ஓட்டு பெட்டியை, காட்டு யானைகள் வழிமறித்ததால், பதற்றம் ஏற்பட்டது.

வால்பாறை மலைப்பகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்ததால், இரவு நேரத்தில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தாய்முடி எம்.டி., டிவிஷன் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஓட்டுப்பதிவு முடிந்து, நள்ளிரவு, 2:00 மணிக்கு ஓட்டுப்பெட்டியை லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. சோலையாறு ஓட்டுச்சாவடி நோக்கி செல்லும்போது, தாய்முடி எஸ்டேட் பகுதியில் யானைகள் குறுக்கே நின்றன.

இதனால் பதற்றமடைந்த அதிகாரிகள், வாகனத்தை ரோட்டில் நிறுத்திவிட்டு காத்திருந்தனர். சிறிது நேரத்துக்குப் பின், யானைகள் ஒதுங்கி வாகனத்திற்கு வழிவிட்டன. இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், சோலையாறு அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்த ஓட்டுப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு, நள்ளிரவில் கோவைக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X