உடுமலை : வெயிலின் தாக்கத்தால், அவரைச்செடியில், பூக்கள் உதிர்ந்து, வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, குறைந்த பரப்பளவில், அவரை சாகுபடி செய்யப்படுகிறது. கொடி மற்றும் கொத்து என இரு ரக அவரை, பரவலாக சாகுபடியாகிறது.நீர் வளம் குறைவாக உள்ள பகுதிகளில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, செடிகளை பராமரிக்கின்றனர். ெஹக்டேருக்கு, 8 முதல் 10 டன் வரை, வீரிய ரக, அவரை ரகங்களில், விளைச்சல் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், நடப்பு சீசனில், வெயிலின் தாக்கத்தால், அவரைச்செடிகளில், பூக்கள் நிற்காமல், உதிர்ந்து வருகிறது. பாசன நேரத்தை அதிகரித்தாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
விவசாயிகள் கூறுகையில், 'அவரை செடிகளை, 50 நாட்கள் முறையாக பராமரித்தால், காய் அறுவடையை துவக்கலாம். பின்னர், குறிப்பிட்ட இடைவெளியில், அறுவடை செய்து, உடுமலை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். நடப்பாண்டு, பூக்கள் உதிர்வால், பாதியளவு விளைச்சல் கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE