அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா பரவலை தடுக்க தண்டனைகள் அவசியம்'

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'கொரோனா பரவலை தடுக்க, சிறைத் தண்டனை உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் தேவை' என, பா.ம.க.,வும், த.மா.கா.,வும் கோரிக்கை விடுத்துள்ளன.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பொது இடங்களில், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம்குறித்து, தமிழக மக்களுக்கு, அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அதற்கு பின், முக கவசம் அணியாமல், வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாமல்
கொரோனா, பரவல், தடுக்க,  தண்டனைகள்

'கொரோனா பரவலை தடுக்க, சிறைத் தண்டனை உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் தேவை' என, பா.ம.க.,வும், த.மா.கா.,வும் கோரிக்கை விடுத்துள்ளன.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பொது இடங்களில், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம்குறித்து, தமிழக மக்களுக்கு, அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அதற்கு பின், முக கவசம் அணியாமல், வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அதிகபட்சமாக, 5,000 ரூபாய் அபராதம் விதிப்பது, சிறைத் தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும்.

அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ, தண்டிப்பதற்காக அல்ல. கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயில் இருந்து, தங்களையும் காப்பாற்றி, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகவே என்பதை, மக்கள் உணர வேண்டும்.அரசு, மக்கள் என, அனைவரும் கைகோர்த்து, கொரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும்.
த.மா.கா., தலைவர் வாசன்: கொரோனாவின் கொடூரமான தாக்கத்தை, ஏற்கனவே அனுபவித்த மக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.வீட்டில் உள்ள பெரியோர், சிறியோர் என, அனைவரும் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அரசின் கோட்பாடுகளை கவனமாகவும், கண்டிப்பாகவும் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்போது தான், இரண்டாவது அலையின் துவக்கத்தை படிப்படியாக, அனைவரும் இணைந்து முறியடிக்க முடியும். அரசின் செயல்பாடுகள் மட்டுமே, இதை கட்டுப்படுத்த முடியாது. தனிமனிதர்களும் முறையாக கோட்பாடுகளை கடைப்பிடித்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நம்முடைய உயிர்களை, நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உண்மை நிலையை புரிந்து, செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஏப்-202108:04:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவ்வளவு நாள் இந்த அரசியவியாதிகளுக்கு தெரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது. இவர்களை என்ன செய்வது. நம் நாட்டின் தலைவிதி
Rate this:
Cancel
08-ஏப்-202106:14:52 IST Report Abuse
ஆப்பு அடப்பாவிங்களா... தேர்தல் பரப்புரைன்னு பட்டி தொட்டியெல்லாம் கூட்டம் போட்டு கொரோனாவை பரப்புனதே நீங்கதானே.. உங்களுக்கு என்ப தண்டனை? தேர்தலில் மக்கள் ஆப்பு வெச்சா சரிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X