பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: ஒருவர் பலி; எட்டு பேருக்கு தொற்று உறுதி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பொள்ளாச்சி நகராட்சி நியூஸ்கீம் ரோட்டை சேர்ந்த 36 வயது பெண், மரப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய், 65 வயது முதியவர், குப்புசாமி வீதி, 38 வயது ஆண், ஜோதிநகர் டி காலனி, 39 வயது பெண், 70வயது முதியவர், ஜோதிநகர் லதாங்கி அவென்யூ, 34 வயது ஆண், அழகாபுரி வீதியை சேர்ந்த, 31 வயது ஆண் என எட்டு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பொள்ளாச்சி நகராட்சி நியூஸ்கீம் ரோட்டை சேர்ந்த 36 வயது பெண், மரப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய், 65 வயது முதியவர், குப்புசாமி வீதி, 38 வயது ஆண், ஜோதிநகர் டி காலனி, 39 வயது பெண், 70வயது முதியவர், ஜோதிநகர் லதாங்கி அவென்யூ, 34 வயது ஆண், அழகாபுரி வீதியை சேர்ந்த, 31 வயது ஆண் என எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும், பொள்ளாச்சியை சேர்ந்த, 56 வயது ஆண், கடந்த, 31ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி பகுதியில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 49 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். 412 பேர் குணமடைந்துள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X