மாதம் ஒருமுறை தான்; குடிநீர் விலைக்கு வாங்கும் அவலம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், மாதம் ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், பனப்பட்டி கிராம மக்கள், குடிநீரை மீண்டும் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குதள்ளப்பட்டனர்.பொள்ளாச்சி பகுதியின் வடகிழக்கு எல்லை கிராமம் பனப்பட்டி. வறட்சி மிகுந்த கிராமம். கல்குவாரிகள் அதிகம் செயல்படுவதால், பாசன கிணறுகள் பெரும்பாலும் வறண்டு விட்டன.கடந்த இரண்டு

பொள்ளாச்சி : அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், மாதம் ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், பனப்பட்டி கிராம மக்கள், குடிநீரை மீண்டும் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குதள்ளப்பட்டனர்.

பொள்ளாச்சி பகுதியின் வடகிழக்கு எல்லை கிராமம் பனப்பட்டி. வறட்சி மிகுந்த கிராமம். கல்குவாரிகள் அதிகம் செயல்படுவதால், பாசன கிணறுகள் பெரும்பாலும் வறண்டு விட்டன.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவு பெய்வதால், தற்போது கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இருப்பினும், இப்பகுதி நீர் நிலைகளில் கிடைக்கும் நீரானது, குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல், அதிக உவர்ப்பு தன்மை கொண்டதாக மாறிவிட்டது. கிராமத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

வடசித்துார், மெட்டுவாவி வழியாக, பனப்பட்டிக்கு குழாய் பதிக்கப்பட்டு, இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இது மக்களுக்கு போதுமானதாக இருந்தது.தற்போது, கடும் வறட்சி துவங்கியுள்ள நிலையில், மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில் இன்னும் தடுப்பாடு ஏற்படலாம் என, பொதுமக்கள் அஞ்சுகின்றனர்

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி, வாரம் இருமுறை கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, வடசித்துாரில் இருந்து, சோளியம்மன் கோவில் வழித்தடத்தில், 4 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதித்து, பனப்பட்டிக்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.பனப்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில், ஏற்கனவே இருந்த பழைய குடிநீர்த் தேக்க தொட்டி இடிக்கப்பட்டுள்ளதால், அதே இடத்தில், இரண்டு லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகிக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X