பொது செய்தி

தமிழ்நாடு

கோடையிலும் ததும்பும் செங்குளம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
உடுமலை : திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், செங்குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தின் கீழுள்ள, குளங்கள் வாயிலாக, நேரடியாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன; சுற்றுப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.இக்குளங்களுக்கு, அரசாணை

உடுமலை : திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், செங்குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தின் கீழுள்ள, குளங்கள் வாயிலாக, நேரடியாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன; சுற்றுப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.இக்குளங்களுக்கு, அரசாணை அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து, தளி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது, பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்காக, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல், ஏழு குள பாசன திட்டத்துக்கும், அணையிலிருந்து, தளி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால், பாசன திட்டத்திலுள்ள ஒவ்வொரு குளமாக நிரம்பி வருகிறது. தற்போது, 74.84 ஏக்கர் நீர்த்தேக்க பரப்புள்ள, செங்குளமும் நிரம்பி வருகிறது.

இதையடுத்து, குளத்தின் வாயிலாக, நேரடி பாசனம் பெறும் நிலங்களில், கரும்பு உட்பட சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.அணையிலிருந்து தொடர்ந்து, தண்ணீர் வழங்கினால், அடுக்குத்தொடராக அமைந்துள்ள பிற குளங்களும், நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால், வரும் கோடை காலத்தில், பாசன நீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது; நிலத்தடி நீர் மட்டமும் சரியாது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X