பொது செய்தி

தமிழ்நாடு

கடைசி இடத்தில் திருவாடானை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருவாடானை : ஓட்டுசதவீதத்தில் கடைசி இடத்தில் திருவாடானை தொகுதி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டு சதவீதம் வெளியாகியுள்ளது. பரமக்குடி 70.59 சதவீதம் பெற்று முதலிடத்திலும், முதுகுளத்துார் 70.29 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும், ராமநாதபுரம் 68.81 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும், திருவாடானை 68.72 சதவீதம் பெற்று நான்காம் இடத்திலும்

திருவாடானை : ஓட்டுசதவீதத்தில் கடைசி இடத்தில் திருவாடானை தொகுதி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டு சதவீதம் வெளியாகியுள்ளது.

பரமக்குடி 70.59 சதவீதம் பெற்று முதலிடத்திலும், முதுகுளத்துார் 70.29 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும், ராமநாதபுரம் 68.81 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும், திருவாடானை 68.72 சதவீதம் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளது.கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட திருவாடானை தொகுதி வாக்காளர்கள் கூறியதாவது- இத் தொகுதியில் விவசாயம் முதலிடத்திலும், மீன்பிடி தொழில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆண்டுதோறும் விவசாயம் பாதிக்கப்படும் போது விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே பயிர் இன்சூரன்ஸ், வெள்ள நிவாரண தொகையை பெறுகின்றனர். இப் போராட்டத்தில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

சட்டசபை தேர்தல் போது பிரசாரத்திற்கு வந்த வேட்பாளர்களிடம் குடிநீர் பிரச்னையை தீர்ப்பவர்களுக்கே ஓட்டு போடுவோம் என்று ஏராளமான கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு உறுதியான வாக்குறுதி அளிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறினர். இவ்வாறு பல்வேறு சம்பவங்களால் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவில் ஆர்வம் காட்டவில்லை என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X