பொது செய்தி

தமிழ்நாடு

'மாமன் - மச்சான் நாங்க...' நெகிழ வைத்த முகவர்கள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருப்பூர், : ''கட்சி, கொள்கை வேறு வேறென்றாலும், நாங்கள், 'மாமன் -மச்சான்', 'நண்பர்'களாக தான் செயல்பட்டோம்'' என்றனர், கிராமப்புற ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிந்த வேட்பாளர்களின் முகவர்கள்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, கிராமப்புற ஓட்டுச்சாவடிகளில், வேட்பாளர்களின் முகவர்களாக செயல்பட்டவர்கள் பலர், நட்புறவுடன் செயல்பட்டதை, பார்க்க முடிந்தது.பிரதான கட்சிகளாகட்டும்;
 'மாமன் - மச்சான் நாங்க...' நெகிழ வைத்த முகவர்கள்

திருப்பூர், : ''கட்சி, கொள்கை வேறு வேறென்றாலும், நாங்கள், 'மாமன் -மச்சான்', 'நண்பர்'களாக தான் செயல்பட்டோம்'' என்றனர், கிராமப்புற ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிந்த வேட்பாளர்களின் முகவர்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, கிராமப்புற ஓட்டுச்சாவடிகளில், வேட்பாளர்களின் முகவர்களாக செயல்பட்டவர்கள் பலர், நட்புறவுடன் செயல்பட்டதை, பார்க்க முடிந்தது.பிரதான கட்சிகளாகட்டும்; சுயேச்சைகளாகட்டும்; அவர்களது முகவர்கள் பெரும் பாலானோர், உறவினர்கள் - நண்பர்களாக தான் இருந்தனர்.

கடமையில், 'கண்'ணாக இருந்த போதிலும், பிரசாரத்தில், எலியும், பூனையுமாக கட்சி தலைவர்களும், பேச்சாளர்களும் விமர்சனக் கணைகளை தொடுத்ததை போன்று செயல்படாமல், அன்பு - பாசம் கலந்த வார்த்தைகளுடன் பரஸ்பரம் பேசிக்கொண்டும், அதேசமயம், பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும் நடந்து கொண்டனர்.

சில முகவர்கள் கூறியதாவது:ஒரே ஊர் - ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், சிறிய வயதில் இருந்தே பரஸ்பரம் நன்கறிந்தவர்கள் என்பதாலும், முகவராக கடமையை செய்தோம்; விரோத மனப்பாங்குடன் செயல்படவில்லை. குறிப்பாக, 12 மணி நேரம் முகவராக செயல்பட்டபோதும், இயல்பாகவும், நட்புறவுடனும் நாங்கள் இருந்ததால், எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கொள்கைகள் வேறு; வேறு என்றாலும், ஊர் பிரச்னை என்று வரும் போது, பல நேரங்களில், ஒற்றுமையுடன் செயல்பட்டிருக்கிறோம்; எப்போதும்போல், 'மாமன் - மச்சான்' ஆகவும், நண்பர்களாகவும்தானே நாங்கள் இருக்கப்போகிறோம்?இவ்வாறு, அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'முகவர்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டார்கள் எனில், ஓட்டுப்பதிவில் சுமூகம் இருக்காது; கிராமப்புறங்களில்,முகவர்கள் நட்புறவுடன் இருந்ததால், எங்கள் பணி எளிதாகவும், இனிமையாகவும் இருந்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X