பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 3 கிலோ பல்லாரி ரூ.50க்கு விற்பனை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மூன்று கிலோ பெங்களூரு பல்லாரி ரூ.50க்கு விற்கப்பட்டது. ராமநாதபுரத்தில் புதன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று மதுரையை சேர்ந்த வியாபாரிகள் மினி லாரியில் பல்லாரி விற்றனர். அப்போது மூன்று கிலோ ரூ.50, ஆறு கிலோ ரூ.100 என விற்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.40 முதல் 60 வரை விற்கப்படும் நிலையில் மூன்று கிலோ ரூ.50 என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மூன்று கிலோ பெங்களூரு பல்லாரி ரூ.50க்கு விற்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் புதன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று மதுரையை சேர்ந்த வியாபாரிகள் மினி லாரியில் பல்லாரி விற்றனர். அப்போது மூன்று கிலோ ரூ.50, ஆறு கிலோ ரூ.100 என விற்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.40 முதல் 60 வரை விற்கப்படும் நிலையில் மூன்று கிலோ ரூ.50 என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.மதுரையை சேர்ந்த வியாபாரி முத்து கூறுகையில், இவை பெங்களூருவில் இருந்து வருகின்றன. பல்லாரி அளவில் சற்று சிறிதாக இருந்தாலும் நல்ல தரமானது. இதில் எங்களுக்கு அதிக லாபம் இல்லா விட்டாலும் மொத்தமாக எடுத்து வந்து விற்பனை செய்கிறோம், என்றார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X