பாதுகாப்பு! ஓட்டுக்கள் எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு.. துணை ராணுவம் உட்பட 1236 பேர் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு! ஓட்டுக்கள் எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு.. துணை ராணுவம் உட்பட 1236 பேர் நியமனம்

Added : ஏப் 08, 2021
Share
பதிவான ஓட்டு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி மையத்தில் துணை ராணுவம் உட்பட 1236 போலீஸ்காரர்களின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர். சட்டசபை தேர்தல் நாளான ஏப்.,6 அன்று நான்கு சட்டசபை தொகுதியில் உள்ள 1679 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு பதிவான ஓட்டு இயந்திரங்கள் நேற்று காலை 10:30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி

பதிவான ஓட்டு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி மையத்தில் துணை ராணுவம் உட்பட 1236 போலீஸ்காரர்களின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் நாளான ஏப்.,6 அன்று நான்கு சட்டசபை தொகுதியில் உள்ள 1679 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு பதிவான ஓட்டு இயந்திரங்கள் நேற்று காலை 10:30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சீலிடப்பட்டன.காரைக்குடி தொகுதி பெட்டிகள் கல்லுாரி முதல்வர் அறைக்கு பின் உள்ள கட்டடத்திலும், திருப்புத்துார் தொகுதி பெட்டிகள் முதல்வர் அலுவலக வளாக கட்டடத்திலும், சிவகங்கை தொகுதி பெட்டிகள் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியிலும், மானாமதுரை (தனி) தொகுதி பெட்டிகள் முருகப்பா அரங்கிலும் எண்ணப்படுகின்றன.

ஓட்டு பெட்டிகள் வைத்து சீலிடப்பட்ட ஸ்ட்ராங்க்' ரூமில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் 4 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் 8 மணி நேர ஷிப்ட்' முறையில் பணிபுரிவர். இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தலா ஒரு அடுக்கிற்கு ஷிப்டிற்கு' 7 எஸ்.ஐ.,க்கள், 28 போலீஸ்காரர்கள் என, 3 அடுக்கு பாதுகாப்பில் மட்டுமே துணை ராணுவ படை, பட்டாலியன், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 900 பேர் வரை ஈடுபடுகின்றனர்.* சிசிடிவி'., கேமரா கண்காணிப்பு:இது தவிர்த்து 4 தொகுதிகளுக்கான ஓட்டு பெட்டிகள் உள்ள அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி வளாகத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் பலத்த கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக உரிய பாதுகாப்பினை எஸ்.பி., ராஜராஜன், கூடுதல் எஸ்.பி., முரளீதரன் உள்ளிட்டோர் உறுதி செய்துள்ளனர்.

ஷிப்டிற்கு (8 மணி நேரம்) ஒரு டி.எஸ்.பி., 6 இன்ஸ்பெக்டர்கள், 16 எஸ்.ஐ.,க்கள் உட்பட 112 பேர் வீதம், மூன்று ஷிப்டிற்கு 336 பேர்களை நியமித்துள்ளனர். இதுதவிர முக்கிய இடங்களில் சிசிடிவி' கேமரா பொருத்தி, கண்காணிக்கின்றனர். ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு பணியில் ஒட்டு மொத்தமாக 1236 பேர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X