மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு

Added : ஏப் 08, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கிராமப் பகுதிகளில் காவிரி கூட்டுகுடிநீரை வசதியுள்ள சிலர் மின்மோட்டார் மூலம்உறிஞ்சி எடுப்பதால் போதிய குடிநீர்கிடைக்காமல் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரணி, சக்கரகோட்டை, பட்டணம்காத்தான், சூரன் கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுகுடிநீர் வழங்கப்படுகிறது. அவ்வப்போது குழாய் சேதம், வால்வு பழுது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கிராமப் பகுதிகளில் காவிரி கூட்டுகுடிநீரை வசதியுள்ள சிலர் மின்மோட்டார் மூலம்உறிஞ்சி எடுப்பதால் போதிய குடிநீர்கிடைக்காமல் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரணி, சக்கரகோட்டை, பட்டணம்காத்தான், சூரன் கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுகுடிநீர் வழங்கப்படுகிறது. அவ்வப்போது குழாய் சேதம், வால்வு பழுது காரணத்தினால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிலர் குடிநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சிதொட்டிகளில் நிரப்புகின்றனர்.

இது குறித்து புகார் தெரிவித்தாலும் ஒரிரு நாட்கள் கண்காணித்துவிட்டு அதன்பின் ஊராட்சிநிர்வாகத்தினர் கண்டுகொள்வது இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் மின்மோட்டார் வைத்து காவிரி கூட்டுகுடிநீரை எடுக்கும் வீடுகள், நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.--

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X