கோடையை வெயிலை சமாளிக்க மண் சிலிண்டர் ஜாடி விற்பனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடையை வெயிலை சமாளிக்க மண் சிலிண்டர் ஜாடி விற்பனை

Added : ஏப் 08, 2021
Share
மானாமதுரை : மானாமதுரையில் கோடை வெயில் அதிகமாக அடிக்க துவங்கியுள்ளதால் மண் சிலிண்டர் ஜாடிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் தற்போதே கோடை வெயில் அக்கினி நட்சத்திர காலத்தில் அடிப்பது போன்று கடுமையாக அடித்து வருவதால் வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்ந்த பானங்களை பருகத் துவங்கியுள்ளனர்.குளிர்ந்த தண்ணீர் பருக மக்கள் தற்போது மானாமதுரையில்

மானாமதுரை : மானாமதுரையில் கோடை வெயில் அதிகமாக அடிக்க துவங்கியுள்ளதால் மண் சிலிண்டர் ஜாடிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் தற்போதே கோடை வெயில் அக்கினி நட்சத்திர காலத்தில் அடிப்பது போன்று கடுமையாக அடித்து வருவதால் வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்ந்த பானங்களை பருகத் துவங்கியுள்ளனர்.குளிர்ந்த தண்ணீர் பருக மக்கள் தற்போது மானாமதுரையில் மண்ணால் செய்யப்பட்ட கூஜாக்கள்,ஜக்குகள்,ஜாடிகள் போன்றவற்றை பெருமளவில் வாங்கி சென்று வருகின்றனர்.தற்போது அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான வீடுகளில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களை வாங்கி அதனை குடித்து வருகின்றனர்.

இதனையும் குளுமையாக மண் வாசனையுடன் குடிக்க மானாமதுரையில் 'சிலிண்டர் ஜாடிகள்'விற்பனைக்கு வந்துள்ளன.இதன் மேற்புறத்தில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களை வாங்கி கவிழ்த்தினால் ஜாடிக்குள் இருந்து வரும் தண்ணீர் குளுமையாகவும், மண்வாசனையுடன் இருப்பதினால் மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தேனி,விருதுநகர், திண்டுக்கல் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் மொத்த வியாபாரிகள் மானாமதுரைக்கு வந்து சிலிண்டர் ஜாடிகளைவாங்கி செல்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X