விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோடை வெயிலால் காய்ந்த சருகுகளுக்கு வைக்கப்படும் தீ மரக்கன்றுகளிலும் பரவி கருகுகிறது. இதனால் நான்கு வழிச்சாலை பசுமை திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.
வனத்துறையின் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மதுரை டூ- கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.பல கோடியை வனத்துறைக்கு வழங்கியது. நன்கு வளரும் மரங்களால் நிழல், குளிர்ச்சியான காற்று, சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது. இதன்படி நான்கு வழிச்சாலையின் இருபுறமும் வேப்பன், புங்கன், புளியன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது. கோடை வெயிலால் காய்ந்த சருகுகளுக்கு ஆடு, மாடு மேய்ப்பவர்கள் தீ வைக்கின்றனர்.
கோடை மழை வரும்போது புதிதாக புற்கள், செடிகள் முளைத்து கால்நடைகளுக்கு தீவனமாகும் என்பதால் தீ வைப்பது தொடர்கிறது. சருகுகளில் பற்றும் தீ அருகில் உள்ள மரக்கன்றுகளுக்கும் பரவி கருகி வருகிறது. மரக்கன்றுகளை சுற்றிலும் உள்ள சருகுகளை அகற்றினால் தீ பரவாமல் தடுத்திட இயலும். தீ வைப்போர் மீதும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.........தடுத்து நிறுத்துங்கமரக்கன்று நடுவது மட்டுமல்லாமல் மரமாகும் வரை தண்ணீர் ஊற்றி பராமரிப்பது என்பது சவாலான காரியம்.
நான்கு வழிச்சாலையில் வனத்துறையினர் கடும் முயற்சிக்கு இடையே மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர். எனினும் சருகுகளுக்கு தொடர்ந்து தீ வைப்போரை ரகசியமாக கண்காணித்து கைது செய்ய வேண்டும். கருகிய மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வனத்துறை முன் வர வேண்டும்.செல்வராஜன், சுற்றுச்சூழல் ஆர்வலர், விருதுநகர்................
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE