சிவகங்கை : சிவகங்கை அருகே செந்திஉடையநாதபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் தங்களை தாக்கிய நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்துள்ளனர்.
செந்திஉடையநாதபுரத்தில் ஏப்., 5 ல் உடையார் என்பவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது கரும்பாவூரைச்சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை ஓரமாக போக வலியுறுத்தியதால் எங்களை தாக்கினர்.இந்த நிலையில் அந்த இளைஞர்கள் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வந்து எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை தாக்கினர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE