சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு அறைக்கு சீல் மின்சப்ளை துண்டிப்பால் கவலை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா இன்ஞ்., கல்லுாரியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கும் பணி நேற்று நடந்தது. மானாமதுரை (தனி) தொகுதிக்கான மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடந்த இப்பணியில்,

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா இன்ஞ்., கல்லுாரியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கும் பணி நேற்று நடந்தது.

மானாமதுரை (தனி) தொகுதிக்கான மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடந்த இப்பணியில், தேர்தல் பார்வையாளர்கள் சோனாவனே, முத்துக்கிருஷ்ணன் சங்கர நாராயணன் மற்றும் மானாமதுரை தொகுதி வேட்பாளர்கள் நாகராஜன், தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு அறையை சோதனை செய்து அறையை பூட்டி சீல் வைக்கும் போது, இரண்டு முறைக்கு மேல் மின்சாரம் துண்டிப்பானது. குறுகிய இடம் இருளில் மூழ்கியது. வேட்பாளர்கள் மட்டுமின்றி சுற்றி நின்ற பலரும் சகுணம் யாருக்கு காட்டுதோ என்றே முனுமுனுத்தனர்.

இதனால், வேட்பாளர்களின் முகம் சுருங்கியது. அலைபேசி வெளிச்சம் மூலம், சீல் வைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மீண்டும் மின்சாரம் வந்து விளக்குகள் மத்தியில் சீல்வைக்கும் பணி முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X