சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு சீல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையத்தில் வைத்து, அதிகாரிகள்,கட்சிபிரதிநிதிகள் முன்பு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 2370 ஓட்டுச் சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள ஸ்ரீவித்யா

விருதுநகர் : விருதுநகரில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையத்தில் வைத்து, அதிகாரிகள்,கட்சிபிரதிநிதிகள் முன்பு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 2370 ஓட்டுச் சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள ஸ்ரீவித்யா கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேர்தல் பார்வையாளர்கள் தேவேந்திரகுமார் சிங் குஷ்வாஹா(ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார்), பிரபான்ஷூ குமார் ஸ்ரீவஸ்தவ்(சாத்துார், சிவகாசி), பினித்தா பெக்கு(விருதுநகர், அருப்புக்கோட்டை), சுரேந்திர பிரசாத் சிங்(திருச்சுழி), மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன், சப் கலெக்டர் தினேஷ்குமார், கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

மையத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு படையினரும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சி.சி.டி.வி., உடன் இணைக்கப்பட்ட தொலைக்காட்சி வாயிலாக 24 மணி நேரமும் கண்காணித்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X