கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மனைவி தர்ணா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மனைவி தர்ணா

Added : ஏப் 08, 2021
Share
விருதுநகர் : கணவருடன் சேர்த்து வைக்க கோரி வங்கி மேலாளரின் மனைவி, மகனுடன் விருதுநகரில் தர்ணாவில் ஈடுபட்டார். விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் ஆர்த்தி 38. விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மதுரை தனியார் வங்கி மேலாளர் செல்வராஜனை 2010ல் திருமணம் செய்தார். 2012ல் விவாகரத்து கேட்டு விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் செல்வராஜன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிமன்றம்

விருதுநகர் : கணவருடன் சேர்த்து வைக்க கோரி வங்கி மேலாளரின் மனைவி, மகனுடன் விருதுநகரில் தர்ணாவில் ஈடுபட்டார்.

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் ஆர்த்தி 38. விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மதுரை தனியார் வங்கி மேலாளர் செல்வராஜனை 2010ல் திருமணம் செய்தார். 2012ல் விவாகரத்து கேட்டு விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் செல்வராஜன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்த வழக்கும் 2017ல் தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னுடன் செல்வராஜன் சேர்ந்து வாழ மறுத்ததை தொடர்ந்து ஆர்த்தி விருதுநகர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே ஆர்த்தி, தனக்கும், தனது மகனுக்கும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான தொகை, இல்லையேல் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என கோரி, விருதுநகர் அல்லம்பட்டி சங்கரநாராயணபுரம் தெருவில் கணவர் வீட்டின் முன்பு மகன் சஞ்சய் கார்த்திக் உடன் தர்ணாவில் ஈடுபட்டார்.அவர் கூறியதாவது: என்னையும், மகனையும் பராமரித்து வந்த தாய் இறந்து விட்டதால் தற்போது வாழ்வாதாரம் இன்றி சிரமப்படுகிறோம். மீண்டும் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X