பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த 10 நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் 10 க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக தினமும் 50 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் முடிந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த 10 நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் 10 க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக தினமும் 50 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பாதிப்பு குறைவின் காரணமாக இந்தாண்டு தொடக்கத்திலேயே வார்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பழநியில் 40, கொடைக்கானலில் 30 படுக்கைகள் கொண்ட வார்டுகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் திண்டுக்கல் -- வத்தலக்குண்டு சாலையில் 150 படுக்கைகளோடு தனியாக கொரோனா பாதித்தோருக்கான வார்டு தற்காலிகமாக தயாராகி வருகிறது. ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை தீவிரப்படுத்தி கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத்துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X