பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து 7 தொகுதிகளுக்கான 5,516 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,611 பதிவை உறுதி செய்யும் கருவி (விவி பேட்) ஆகியவை திண்டுக்கல் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி

திண்டுக்கல் : ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து 7 தொகுதிகளுக்கான 5,516 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,611 பதிவை உறுதி செய்யும் கருவி (விவி பேட்) ஆகியவை திண்டுக்கல் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.நேற்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவி பேட்டை தனி அறையில் வைத்து பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணிக்கை மையம் முழுவதும் துணை ராணுவ வீரர்கள், போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தினமும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் பார்வையிட்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்திட்டு பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். கட்சி முகவர்களும் இதனை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X