கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக தரம் உயர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை சுற்றுலா முகவர்கள் சங்கம் (எப்.ஓ.டி.ஓ.) தலைவர் சதீஷ்குமார் தாக்கல் செய்த பொது நல மனு:மதுரை விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. புதிதாக 17 ஆயிரத்து 600 சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த முனைய கட்டடம்

மதுரை:மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை சுற்றுலா முகவர்கள் சங்கம் (எப்.ஓ.டி.ஓ.) தலைவர் சதீஷ்குமார் தாக்கல் செய்த பொது நல மனு:மதுரை விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. புதிதாக 17 ஆயிரத்து 600 சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த முனைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் சென்னை விமான நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய முனையம்.

பழைய முனையம் சரக்கு பெட்டகங்களை கையாளும் வணிக முனையமாக மாற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் பரபரப்பாக இயங்கும் 36 விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமும் ஒன்று.குறைந்த பயணிகளை கையாளும் உ.பி.குஷி நகர் விமான நிலையம் உட்பட சில சிறு விமான நிலையங்களை மத்திய அரசு சர்வதேச விமான நிலையங்களாக அறிவித்துள்ளது.

மதுரை விமான நிலையம் 2017-18 ல் 14 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இங்கிருந்து 2019 ல் சிங்கப்பூர், இலங்கை, துபாய் உட்பட சில நாடுகளுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். விமான நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதலாக நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதை சுங்கத்துறை விமான நிலையமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

திருச்சி, திருப்பதி, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையங்களின் முனையங்களைவிட மதுரை விமான நிலைய முனையம் பரப்பளவில் பெரியது. இதை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தகுதிகள் உள்ளன. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தக்கோரி மத்திய மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சதீஷ்குமார் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் எஸ்.ஆனந்தி அமர்வு: மக்கள் பிரதிநிதிகளை மனுதாரர் அணுகலாம். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து வெளியிட்டனர்.மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலர், இந்திய விமான நிலையங்களின் ஆணைய தலைவர், மாநில போக்குவரத்துத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.26க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X